மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
மேதகு
தமிழீழத்தின் வரலாற்று நாயகனைப் பற்றிய தகவலுக்கு வரவேற்கிறோம்
கருத்துகள்
நாம் இங்கு உங்கள் கருத்துகளை கேட்க வருகிறோம். மேதகு பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்துகளை பகிரவும்.
வாழ்க தமிழீழம் - உங்கள் கருத்துகளை தயவுடன் பகிருங்கள்.
விழிப்புடன் இருப்போம்
எம்மை அளிக்க வந்த எதிரியைக்கூட மனிதநேயத்துடன் வழிநடத்திய எம் தலைவர் எந்த சூழலில் என்ன முடிவு எடுப்பார் என்பது தமிழ்த்தேசியத்தையும் தலைவரையும் புரிந்துகொண்ட எமது உறவுகள் நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆகவே எம் தேசத்து உறவுகளே எதிரி எம்மை அழிக்க எந்த ஆயுதத்தையும் கையில் எடுப்பான் என்பதை நன்கு அறிவீர்கள். காலம் காலமாக எமக்குள்ளேயே எம்மை மோதவிட்டு எம்மை அழிப்பதில் வெற்றிகண்ட எதிரி எமக்குள் இருக்கும் விருப்பு வெறுப்பு மற்றும் கருத்துவேறுபாடுகளை நுட்பமாக கையாளத்தெரிந்த எதிரிக்கு நாமே தும்பு எடுத்து கொடுக்கலாமா?
எமக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைக்க நாம் இடமளிக்கலாமா? சிந்தித்துப்பாருங்கள் ....
காலம் காலமாக எதிரியின் எத்தனை வகையான உளவியல் யுத்தத்துக்கு இரையாகி எம்மை சிதைத்து அழித்திருக்கிறோம்? இத்தனை இழப்புக்கள் அழிவுகளுக்கு முகம் கொடுத்த நாம் கற்றுக்கொண்டது போதும். எம்மை நாமே காக்கவும் எமக்குள் இருக்கும் கருத்துக்களை அறிவுபூர்வமாகவும் நாகரீகமாகவும் பேசி எமது உறவுகள் எமக்காக விட்டுச்சென்ற கடமைகளை செயற்படுத்த சிந்திப்போம், கருத்துக்களை கருத்துக்களால் நாகரிகமான முறையில் பரிமாறிக்கொள்வோம். எம்மை விட்டுச்சென்ற உறவுகளின் ஆன்மாக்கள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம். எமது உறவுகளின் ஆன்மாக்கள் எம்மை வழிநடத்தட்டும்.
விழிப்புடன் இருப்போம். நம்மை நாமே காப்போம்.